Breaking News

NPP விரும்பும் உபவேந்தர் யார்?

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஒன்பது வேட்பாளர்களில் மூன்று பேரை தெரிவு செய்வதற்காக நாளை 03.04.2025 ஆம் திகதி நேர்முக தெரிவு நடைபெற உள்ளது. 


இந்த ஒன்பது வேட்பாளர்களில் பேராசிரியர் MIS. சபீனா அவர்களுக்கு அதிகமாக வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று ஆளும் அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.


ஏனெனில் பேராசிரியர் சபீனாவின் கணவர் NPP தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஆதம்பாவா அவர்களின் பிரத்தியேக செயலாளர் என்பது அனைவருக்கும் தெரியும். 


இந்த தெரிவில் பேராசிரியர் சபீனா உபவேந்தராக தெரிவு செய்யப்படுவது நூறு வீதம் நிச்சயம் என்பதனால் பல்கலைக்கழகத்தின் உள்ளக நிருவாகிகளையும் அதிகாரிகளையும் நியமிப்பதற்கான பட்டியலை ரகசியமாக தயாரித்துள்ளனர். 


அரசியல் தலையீடுகளின்றி அனைத்து அரசு நியமனமும் நடைபெறும் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம், 


அரசியல் தலையீடுகளின்றி தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று பீத்துகின்ற இந்த அரசாங்கம், 


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை தெரிவு செய்யும் விடையத்தில் ஏன் அரசியல் செல்வாக்கினையும், அரசியல் அதிகாரத்தையும் பின்கதவால் பயன்படுத்துகின்றனர்?


ஒரு கல்வி நிறுவனத்தில் தங்களுக்கு வாசியான ஒரு பெண் உபவேந்தராக தெரிவானால் தனது அரசியலுக்கு ஏற்ப பயன்படுத்தலாம் என்று ஆதம்பாவா எம்பி கனவுகண்டு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கு வலை விரித்துள்ளார். 


தனது செயலாளரின் மனைவியை உபவேந்தராக நியமிப்பதில் இருக்கும் ஆர்வத்தினால் JVP கொள்கையை மறந்துவிட்டாரா?


அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஆதாம்பாவா JVP யின் கொள்கை பற்றி பயிற்சி பெறவில்லையா? என்று பல்கலைக்கழக சமூகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.


MZM. Zahran




No comments