Breaking News

கல்முனை மாநகர சபையில் நோன்புப் பெருநாள் இன ஐக்கிய ஒன்றுகூடல்.!

(அஸ்லம் எஸ். மெளலானா)

கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் இன ஐக்கிய ஒன்றுகூடல் மற்றும் விருந்துபசார நிகழ்வு இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.


கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார்.


அத்துடன் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி நந்தினி பவான், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் மற்றும் பிரிவுத் தலைவர்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மூவின உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.


இதன்போது கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. வருமானப் பரிசோதகர் ஏ.ஜே. சமீம் நன்றியுரை நிகழ்த்தினார். அபிவிருத்தி உத்தியோகத்தர் டிலிப் நௌஷாத் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார்,


கடந்த காலங்களில் பண்டிகை நிகழ்வுகள் யாவும், மாநகர சபையின் பிரிவுகள் ரீதியாக தனித்தனியே இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வானது மாநகர ஆணையாளரின் ஆலோசனை, வழிகாட்டலில் முதன்முறையாக சகல பிரிவுகளையும் ஒன்றிணைத்து, அனைத்து ஊழியர்களையும் உள்வாங்கி ஒரே கூரையின் கீழ் பொது நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.













No comments