றிசாத் பதியுதீனும், ஹரீஸ் எம்பியும். வெளியே கசியாத உள்வீட்டுத் தகவல்கள்.
ஹரீஸ் எம்பி மக்கள் காங்கிரசில் இணைய உள்ளாராம் என்று அவரது அல்லக்கைகள் பேசிக்கொள்கிறார்கள். முஸ்லிம் காங்கிரசில் மீண்டும் இணைவதற்கு ஹரீஸ் எம்பி எடுத்த முயற்சி தோல்வியாம்.
லைக்கா நிறுவனமான தமிழ் டயஸ்போராவின் உதவியுடன் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கும் முயற்சி தோல்வியாம். லைக்கா நிறுவனத்தினர் முஸ்லிம் காங்கிரசுக்குள் ஹரீஸ் எம்பி மூலமாக கட்சியை உடைத்து தலைவர் பதவிக்கு ஹரீஸ் எம்பியை நியமிக்கும் ப்ரொஜெக்ட் தோல்வியாம். அதனால் லைக்கா நிறுவனம் ஹரீசை கைவிட்டு விட்டார்களாம். அதனால் பணம் தட்டுப்பாடாம்.
விரைவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட உள்ளாராம். றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு உள்ளே சென்றால், மக்கள் காங்கிரசின் தலைவர் பதவியை கைப்பற்றும் திட்டம் ஹரீசிடம் உள்ளதாம். இந்த திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்துசென்ற பாலமுனை அன்சில் போன்ற பல உயர்பீட உறுப்பினர்கள் ஹரீசுக்கு ஆதரவாம்.
ஹரீஸ் எம்பி மக்கள் காங்கிரசில் இணைந்தால் ஜவாத் காக்கா வெளியேறுவாராம். தலைவர் பதவியை கைப்பற்றும் திட்டம் ஹரீசிடம் இருப்பது ஜவாத் காக்காவுக்கு தெரியுமாம்.
மறுபக்கம் ஹரீசை கட்சிக்குள் எடுத்தால் கல்முனை தொகுதியை கைப்பற்றலாம் என்ற திட்டம் றிசாத் பதியுதீனிடம் உள்ளதாம். தனது ஊழல் பயில்கள் இன்றைய அனுர அரசிடம் உள்ளதனால் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை றிசாத் பதியுதீன் தவிர்த்து வருகின்றாராம்.
எது நடந்தாலும் ஹரீஸ் எம்பியை வைத்து கொன்ரோல் பண்ணினால் அது ஒரு பெரிய சாதனைதான்.
ஏ. ரிபாய் அஹமட்
No comments