Breaking News

ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்குள்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் திரு என். பத்மநாதன் தெரிவித்துள்ளார்.


மேற்படி வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலை கட்டிடங்கள் வர்ணம் தீட்டி மெருகூட்டும் செயற்திட்டம் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாம் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments