சிலாபம் - முன்னேஸ்வரத்தில் இடம்பெற்ற உற்சவம்
(உடப்பு -க.மகாதேவன்)
சிலாபம் - வரலாற்று சிறப்பு வாய்ந்த முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஷ்வாமி ஆலய வசந்த நவராத்திரி ஶ்ரீதச சண்டிஹோம விஞ்ஞாபனம் ஞாயிற்றுக்கிழமை (6) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது, மேருயந்திரபூஜை ,ஸ்ரீ வித்தியா ஹோமம், துர்க்கா ஹோமம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. அத்துடன் குமாரிபூஜை, சுவாசினி பூஜை, கோபூஜையும் நடைபெற்று ஶ்ரீ வித்யா நவாவரண ஹோமப் பூஜையும் இடம்பெற்றது.
பூஜையில் ஆலயத்தின் பிரதான குருவான பிரம்மஶ்ரீ ச.பத்மநாபக் குருக்கள் கலந்து கொண்டதோடு, உதவிக் குருக்கள்களும் கலந்து சிறப்பித்தனர். இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.
No comments