உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வெற்றி வியூகம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அபேட்சகர்களுக்கு விளக்கமளிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசசபை ஊடாகப் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் அபேட்சகர்களுக்களுடனான கலந்துரையாடலொன்று (03) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழ் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகவாபி ஆகிய பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம்?, அதற்கான தேர்தல் வியூகங்களை எவ்வாறு வகுக்கலாம்? என்பது தொடர்பான வெற்றி வியூகக் கலந்துரையாடலில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு தனது காத்திரமான கருத்துக்களை முன்வைத்து, வெற்றி பெறுவதில் உள்ள வியூகங்களைத் தெளிவுபடுத்தினார்.
No comments