கடற்றொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் பல உதவித் திட்டங்கள்- உடப்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன்
(உடப்பு-க.மகாதேவன்)
உடப்பு இந்து ஆலய பரிபாலன சபையும் உடப்பு மீன்பிடி சங்கங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் திரு.இராமலிங்கம் சந்திரசேகரனை வரவேற்கும் நிகழ்வுக் கூட்டம் ஒன்று உடப்பு இந்து கலாச்சார மண்டபத்தில் புதன்கிழமை (2) உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.வை.கந்தசாமி தலைமை இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றிய கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் உடப்பு கிராமத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை எமது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசு முன்னெடுக்கும் எனவும், கடற்றொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் பல உதவிகளையும் செய்யும் என்றும் அத்துடன் இந்த ஊரில் குறைபாடுகள் ஏதும் இருப்பின் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் அதற்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு மீன்பிடி சங்கத் தலைவர்களினால் மகஜர்களும் அமைச்சரிடம் நேரடியாக்க் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments