Breaking News

பாடநெறியை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு!

முஹம்மட் இல்ஹாம்

ரமலான் மாதத்தை பயனுள்ளதாக கழிப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் புத்தளம் ஹாமித் எக்கடமி மூலம் நடாத்தப்பட்ட ஒரு மாத கால பாட நெறியை பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கான கௌரவப்பு நிகழ்வு ஹாமித் எக்கடமியின் அதிபர் அஷ்ஷேக் இஹ்ஸான் (நவவி) அவர்களின் தலைமையில் புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம் பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர்  உஸ்தாத் இர்ஷாத் இஸ்லாஹி அவர்கள் கலந்து கொண்டதோடு


இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அ.இ. ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் ஜிப்னாஸ்(மிஸ்பாஹி) , செயலாளர் அஷ்ஷைக் அஸீம் (ரஹ்மானி) மேலும் புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் விரிவுரையாளர் உஸ்தாத் ஜுனைதீன் (நூரி), மன்பஉஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷைக் அர்ஷத் (நவவி) அவர்களும் கலந்து கொண்டனர்.


குறித்த இந்நிகழ்வில் பாடநெறியை நிறைவு செய்த 30 மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும், சிறந்த அடைவை வெளிப்படுத்திய மாணவிகளுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.



























No comments