Breaking News

பைசர் மரிக்கார் விடுத்துள்ள ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் பன்னிரண்டு மாதங்களில் ஒன்பதாவது மாதமாக கருதப்படும் ரமழான் மாதம், நன்மை தரும் மாதமாக கருதப்படுகின்றது. அவ்வாறான நன்மைகளை அடைந்தவர்களாக ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பைசர் மரிக்கார்.


அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


ஒரு மாத காலமாக நோன்பு நோற்று ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் மத, சமூக, கலாசார செய்தியை வழங்கும் ரமழான் பெருநாள் தினத்தை முன்னிட்டு, அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.


ஈத் முபாரக்




No comments