அறநெறிப் பாடசாலைகளுக்கு உபகரணம் வழங்கி வைப்பு!.
(உடப்பு - க.மகாதேவன்)
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், புத்தளம் மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வருடாந்த கருத்தரங்கும், புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும், கடந்த 05.04.2025 ஆம் திகதி சனிக்கிழமையன்று புத்தளம் இந்து மகா சபை மண்டபத்தில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.வை. அநிருத்தனன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக சைவப்புலவர் திரு.கஜேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்விற்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள நிர்வாக உத்தியோகாத்தர் திருமதி இதயராணி அவர்களும், இந்துமகா சபையின் செயலாளர் திரு. திருச்செல்வம் அவர்களும் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகாத்தர் திரு குகதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
மேலும் நிழ்வில் வளவாளர் தனது விரிவுரையுடன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தொடர்பிலும் விளக்கமளித்தார். நிகழ்வின் முடிவில் அறநெறிப் பாடசாலைகளுக்கான நூல்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை புத்தளம் மாவட்ட இந்து சமய கலாசார அலுவல்கள் அபிவிருத்தி உத்தியோகாத்தர் திருமதி. ர.விமலரஞ்சினி அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments