அமேசன் கெம்பஸ் மற்றும் அமேசன் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரை க்காரின் வாழ்த்துச் செய்தி
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை நிறைவு செய்து புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமேசன் கெம்பஸ் மற்றும் அமேசன் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரை க்கார்.
மேலும் தமது வாழ்த்துச் செய்திகள் அவர் தெரிவித்துள்ளதாவது.
இஸ்லாம் மார்க்கம் ஏனையவர்களின் உரிமைகளை மதிப்பதோடு அவர்களது தேவை தொடர்பில் கண்டறிந்து அதற்கான உதவிகளை செய்யுமாறு கூறி நிற்கின்றது.
அதில் பிரதான ஒன்றாக இந்த நோன்பை நாம் நோட்டிருந்தோம். இந்த நோன்பானது பசி பட்டினி என்பவற்றை நாம் உணர்வது மட்டுமல்லாமல் ஏனையவர்களும் இவ்வாறான நிலையில் இருப்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வதில் பிரதான இடத்தை வகிக்கிறது.
இன்று உலகளாவிய முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்ற இந்த வேளையில் அவர்களது விடிவுக்கும் விமோசனத்திற்குமாக இன்றைய தினத்தில் நாங்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதானது மிகவும் காலத்தின் தேவையாகவுள்ளது.
இந்த வகையில் இன்றைய நோன்பு பெருநாளை அமைதியாகவும், ஒழுக்கத்துடனும் கொண்டாடும் இஸ்லாமிய சமூகமானது தொடர்ந்து நோன்பு கற்றுத் தந்த பாடத்தை நம் வாழ்வில் முன்னெடுத்துச் செல்வது மிக அவசியமாகும்.
இன்றைய ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று இல்ஹாம் மரைக்கார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments