இலங்கை இந்தியாவின் 29 வது மாநிலமா ?
இலங்கைக்கு வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், யாழ்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றினை நிர்மாணித்துத் தருமாறு 1996 இல் இலங்கைக்கு உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த முன்னாள் இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையானது தனது நாட்டின் தலைவரிடம் கோருவதுபோன்ற சூழ்நிலை தெரிந்தது.
அதுபோல் ரயில்பாதை உட்பட இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்களை இந்திய பிரதமர் திறந்துவைத்தார். அத்துடன் அனுராதபுரத்துக்கு சென்ற அவர் பௌத்த தேரரின் காலில் விழுந்தார்.
இந்திய பிரதமர் தமிழ் நாட்டுக்கு சென்றாலும் இதேபோன்று தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தங்களது தேவைகளை கோருவதும், அபிவிருத்தி திட்டங்களை திறந்துவைப்பதும் வழமையாகும்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இலங்கையைவிட்டு திரும்பி செல்லும்போது இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கின்ற பகுதியை காணொளி எடுத்து தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இவைகளையெல்லாம் பார்கின்றபோது இலங்கை இந்தியாவின் 29 வது மாநிலமா ? அல்லது அவ்வாறானதொரு சிந்தனை இந்திய பிரதமரின் மனதில் தோன்றியிருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது.
முகம்மத் இக்பால்
No comments