Breaking News

சாய்ந்தமருதில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் "சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் - 2025

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற "சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும்  சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் பல் தேவை கட்டிடத் தொகுதி வளாகத்தில் (08) மிக சிறப்பாக நடைபெற்றது.


சமுர்த்தி மற்றும் நலன்புரி உதவி பெறும் மக்களது உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் வருடாவருடம் இந்த அபிமானி சந்தைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.


சமுர்த்தி தலைமைப்பீட  முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.


சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா நிகழ்வில் கௌரவ அதிதியாகவும் திட்டமிடல் திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எ.எம்.எம். றியாத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். றம்ஸான், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி உத்தியோகத்தர் சர்பீன், கருத்திட்ட உதவியாளர் ஜாபீர், வலய உதவி முகாமையாளர் நௌஷாத், சன சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், பொது முகாமைத்துவ அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வை சிரேஷ்ட அறிவிப்பாளர் ஐ. ஜாபீர் தொகுத்து வழங்கினார்.


இதன்போது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.











No comments