கனமூலை பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
(எம். ஏ. ஏ. காஸிம்)
உலக வாழ் முஸ்லிம் மக்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மதுரங்குளி கனமூலை சேகுஅலாவுதீன் விளையாட்டு மைதானத்தில் புனித நோன்புப் பெருநாள் விஷேட தொழுகை இன்று காலை 7.00 மணியளவில் நடை பெற்றது.
கனமூலை ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஏ.எம். அன்பாஸ் (ஹிழ்ரி) அவர்களின் தலைமையில் நோன்புப் பெருநாள் விஷேட தொழுகை நடை பெற்றது.
இதன் போது அதிகளவிலான ஆண்கள் மற்றும் பெண்களும் இந்த விஷேட நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.
இறுதியில் பாலஸ்தீன் மக்களுக்காக விஷேட துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments