கண்டக்குழி பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2002 ம் ஆண்டு சாதாரண தர வகுப்பு பழைய மாணவர்களால் பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட ஒலி பெருக்கி சாதனங்கள் பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம் ஜஸீமிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாடசாலையின் பிரநி அதிபர் எம் என் எம். அஸ்மிர், உதவி அதிபர் எம். ஜூனைத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் மற்றும் ஏனைய சகல பழைய மாணவர்களையும் ஒன்றிணைத்து முன்னேற்ற பாதையில் பாடசாலையை கொண்டு செல்வதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் முதற்கட்டமாகவே பாடசாலையின் முக்கிய தேவையாக காணப்பட்ட ஒலி பெருக்கி சாதனங்கள் தொகுதி ஒன்றை வழங்கி சகல பழைய மாணவர்களுக்குமான ஒரு முன்மாதிரி செயற்பாட்டை நிறைவேற்றியுள்ள 2002 சாதாரண தர பழைய மாணவர்களுக்கு பாடசாலையின் நிர்வாகம் சார்பாக தமத நன்றிகளையும் வாழ்த்துக்களையும் அதிபர் எம்.பீ.எம் ஜஸீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments