Breaking News

கற்பிட்டி பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கற்பிட்டி நகரில் களம் இறங்கும் துடிப்பான புதுமுகங்கள்

(கற்பிட்டி எம்.எஸ்.எம் ஸகீர்)

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி பிரதேச சபைக்கு மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. கடந்த முறை கற்பிட்டி பிரதேச சபையில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காணப்பட்டது.


இதன் அடிப்படையில் இம்முறையும் அதிக ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கற்பிட்டி பிரதேச சபையில் பெறும் முனைப்புடன் கற்பிட்டி நகர வட்டாரங்களில் துடிப்பான புது முகங்களாக ஆறு வேட்பாளர்கள் இம்முறை களம் இறங்கியுள்ளனர்.


இதன்படி தொழிலதிபர் ஏ.ஆர்.எம் முஸம்மில் தலைமையில் வர்தகர்களான எஸ்.எம் பைசல் மற்றும் எம் எச் எம் ஹில்மி, மௌலவி றிப்கான் ( றஹ்மானி), சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எச்.எம் சியாஜ் மற்றும் பெண்கள் பிரதிநிதி என மரச் சின்னத்தில் வேட்பாளர்களாக போட்டி இடுகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments