Breaking News

புத்தளம் - உடப்பில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு!.

 (உடப்பு-க.மகாதேவன்)

உடப்பு கிராமத்தில் வேல்ட்விஷன் ஆதரவில் 20லட்சம் ரூபாசெலவில் “செயற்திட்டத்தின் சிறுவர் பூங்கா" வெள்ளிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.


முந்தல் பிரதேசசெயலக திட்டமிடல் பணிப்பாளர் நிஷாந்த தேசப்பிரிய, வேல்ட்விஷன்  செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.டில்ஷான் அவர்களும் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். அத்துடன் இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.வை.கந்தசாமி, முன்னாள் அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், உடப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், இந்து மதகுருமார்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இதன் போது சிறுவர்கள் பலர்விளையாட்டு நிகழ்வில் சந்தோஷத்துடன் களித்து மகிழ்ந்தனர்.
















No comments