மருதமுனை மசூர் மெளலானா விளையாடு மைதானத்திற்கு முன்னாள் எம்.பி ஹரீஸ் விஜயம்
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிராந்தியத்தில் விளையாட்டு வீரர்களின் நீண்ட கால தேவையாக இருந்த மின்னெளி விளையாட்டு மைதானமொன்று இல்லாத குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி அறுபது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மூலம் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்திற்கு நிரந்தரமாக மின்னெளி பொருத்தப்பட்டுள்ளது. அதன் பூர்வாங்க வேலைகளை பார்வையிடும் முகமாக இன்று (25) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இவ் விஜயத்தின் போது மைதானத்தில் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் சம்மந்தமாகவும் ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடியிருந்தார். இந்த மைதானமானது அம்பாறை மாவட்டத்தில் ஒரேயொரு மின்னெளி மைதானமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் விஜயத்தின் போது கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம் முஸ்தபா,மற்றும் எம்.சமீம்,மருதம் விளையாட்டுக்கழக செயலாளர் அசன் மனாஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபை ஆகியன இணைந்து இவ்வேலைத்த்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து நிறைவேற்றியது. இவ் செயற்திட்டத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் மென்பந்து கிரிக்கெட் வீரர்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments