Breaking News

கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளர்களுக்கான செலவு அறிக்கை தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு அறிக்கையிடல் தொடர்பான தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை பிற்பகல்  இடம்பெற்றது


புத்தளம் மாவட்ட தேர்தல்  தெரிவத்தாட்சி அதிகாரிகள் காரியலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி தெளிவூட்டும் செயலமர்வில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் கால செலவு அறிக்கைகள் எவ்வாறு தயார் செய்யப்பட வேண்டும் அதற்கான விதிமுறைகள் மற்றும் அவைகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அறிக்கையிடப்பட்டு சமர்ப்பிப்பதன் ஊடாக வேட்பாளர்கள் தம்மை சட்ட சிக்கல் ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பன பற்றியும் தெளிவூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





No comments