கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஒன்று வியாழக்கிழமை (27) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி, மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.ஏ.எம் றிபாத், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.மர்ஜானா, நிர்வாக கிராம உத்தியோகத்தர் பீ.எம்.எம் பைனஸ் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இவ் இப்தார் நிகழ்வில் மௌலவி மிக்தாதின் விஷேட பார்க்க சொற்பொழிவும் இடம்பெற்றது.
இதில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என சிலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments