ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணியில் விளையாடி பாராட்டை பெற்ற கற்பிட்டி இஷ்ராத் ஹூசைன்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருட மாணவராக கல்வி கற்று வரும் கற்பிட்டியைச் சேர்ந்த ஸாஹிர் இஷ்ராத் ஹூசைன் 2024 ம் ஆண்டுக்கான தேசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றியதுடன் அணியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களின் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை யின் பழைய மாணவரும், கற்பிட்டி பேர்ல்ஸ் உதைபந்தாட்ட அணியின் வீரருமான இவர் கற்பிட்டியில் வசித்து வரும் முன்னாள் ஆசிரியர் ஸாஹீர் மற்றும் றஸீதா உம்மா தம்பதிகளின் புதல்வர்.
மேலும் இஷ்ராத் ஹூசைன் 2023 ஆண்டிலும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்ற பாட்டையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments