புதுக்குடியிருப்பு கத்தார் வாழ் உறவுகள் ஏற்பாட்டில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு
புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு என். எம். ஹபீல் (கபூரி,JP)
புனித ரமழான் மாதத்தையிட்டு, வெளிநாட்டு வாழ் புதுக்குடியிருப்பு சமூகம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முறையாக நடைபெற்ற இப்தார் நிகழ்வு (21) வெள்ளிக்கிழமை கத்தார் Well on Restaurant ல் நடைபெற்றது.
“ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றதோடு மிக முக்கியமாக புதுக்குடியிருப்பு சமூகம் சார்பாக, கல்வி மற்றும் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் இவ்இஃப்தார் நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட புதுக்குடியிருப்பு உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தது பாராட்டத்தக்க விடயமாகும்.
No comments