Breaking News

கற்பிட்டி பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் செயலாளராக சுமார் ஒரு வருட காலம் தற்காலிக இணைப்பு செய்யப்பட்டிருந்த எஸ் மிளங்க பிரபாத் நந்தசேன திங்கட்கிழமை (03) முதல் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்று செல்கின்றார்.


இதனையொட்டி கற்பிட்டி பிரதே செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி தலைமையில் செயலாளருக்கான பிரியாவிடை நிகழ்வு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது 


இதில் கற்பிட்டி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய ஊழியர்கள் என சகலரும் கலந்து கொண்டதுடன் செயலாளருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments