Breaking News

வருடாந்த இப்தார் நிகழ்வும் கரைவாகுப்பற்று இலக்கிய ஆய்வு மையம் அங்குரார்ப்பணமும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடாத்திய வருடாந்த இப்தார் நிகழ்வு (23) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.


சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். சபீனா விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தை மையப்படுத்தி, கரைவாகுப்பற்று இலக்கிய ஆய்வு மையம்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 


சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையமானது சுமார் 3 வருட காலமாக கலை இலக்கியத் துறை சார் மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் இப்பிரதேசத்திற்கும் பாரிய சேவையாற்றி வருகின்ற ஒரு முன்மாதிரியான நிறுவனமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


சாய்ந்தமருது பிரதேச கலாசார மத்திய நிலையம் இலக்கியவாதிகள் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் இலக்கிய ஆளுமைகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அதாவது தற்கால நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலக்கியவாதிகள் எதிர்நோக்கும் சவால்களை முறியடிப்பதற்கான ஒரு புரட்சிகரமான, முன்மாதிரியான செயற்பாடாக, இலங்கையின் முதன்முறையாக சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையமானது, கிழக்கை மையப்படுத்திய, கரைவாகுப்பற்று  ஆழ்புல எல்லையை மையப்படுத்திய,  "கரைவாகுப்பற்று இலக்கிய ஆய்வு மையம்" ஒன்றை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் உருவாக்கி, அதனூடாக இலக்கியத்துறையில் சாதிக்கின்ற, இலக்கியத்துறை சார்ந்த இலக்கியவாதிகளை, இலக்கிய ஆளுமைகளை, எழுத்தாளர்களை, கவிஞர்களை, கதையாசிரியர்களை ஊக்கப்படுத்துகின்ற, கரைவாகுப்பற்று என்று அழைக்கின்ற ஒலுவில் கழியோடைப் பாலத்திற்கும் நீலாவணைப் பாலத்திற்கும் இடைப்பட்ட  பிரதேசத்தில் உள்ள அனைத்து இன, மத இலக்கியத் துறையினருக்குமான ஒரு பிரதான மத்திய நிலையமாக, அதாவது "கரைவாகுப்பற்று இலக்கிய ஆய்வு மத்திய நிலையமாக" இந்த கலாசார மத்திய நிலையத்தில் எதிர்காலத்தில் உருவாக்கி, அதனூடாக கலைஞர்களின், இலக்கியம் தொடர்பான இலக்கியவாதிகளின் ஆய்வு மையத்துக்குரிய அனைத்துப் பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்வதாகவும் இதனூடாக இலக்கியவாதிகளின் ஒன்றுகூடல்கள்,  ஆய்வுக்கலங்கள், அவர்களது கருத்தாடல்கள், புத்தக வெளியீடுகள், இலக்கிய ஆய்வு மாநாடுகள் போன்ற விடயங்களைச் செய்வதற்கான ஒரு முன்னேற்பாட்டைச் செய்திருப்பதாகவும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தனது தலைமையுரையின் போது சுட்டிக்காட்டினார்.


இந் நிகழ்வில், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ரம்ஸான், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரும் கலாசார மத்திய நிலையத்தின் ஆலோசகருமான, ஏ.சீ.எம். பழீல், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான ஏ.எச். சபீகா, ஏ.எம். தௌபீக், பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சீ.முஹம்மத், ஏ.சி. ரியாஸ், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ பஷீர், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ். இம்தியாஸ் மற்றும்  மத்திய நிலைய அபிவிருத்தி சங்க செயலாளர் அஸ்வான் மௌலானா, இறக்காமம் கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத், கல்முனை கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஜெனித்ரா தேவசந்திரன், உட்பட கலாசார மத்திய நிலைய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்ரப், சிரேஷ்ட அண்ணாவியார், எம். ஐ. அலாவுதீன், கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன், எம். மாஹிர், என்.எம். (மருதூர்) அலிக்கான், கலாபூஷணம் சுபுஹான், மற்றும் மத்திய நிலையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் பல்துறைக் கலைஞருமான எம்.எஸ்.எம்.ஸாகிர்,  கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மத்திய நிலைய வளவாளர்களான எம்.ஐ.எம். அமீர், எம்.எம்.எம். தாதீஸ், மத்திய நிலைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வில், முக்கிய அம்சமாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா,  அவர்களுக்கு மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் உட்பட கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி குழுவினரால் அதிதிகள் புடை சூழ, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எம். தௌபீக் (நளீமி) இப்தார் பற்றிய விசேட சொற்பொழிவை நிகழ்த்தினார்.












No comments