மதுரங்குளி முக்குத்தொடுவா வீதிக்கான தற்காலிக மாற்று பாதை திறந்து வைப்பு!.
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மதுரங்குளி முக்குத்தொடுவா வீதியில் உள்ள டச்சுப் பாலத்தின் புணரமைப்புக்காக மூடப்பட்ட வீதிக்கான மாற்றுப் பாதை இன்று (22) சனிக்கிழமை மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.டி அமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது
மேற்படி திறப்பு விழாவில் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எம்.எச்.எம் தௌபீக், மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதத்தலைவர்கள், மதுரங்குளி வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments