புத்தளம் அக்கரவெளி மண்ணிலிருந்து ஒரு சாதனையாளர்
(புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு என். எம். ஹபீல் (கபூரி,JP)
புத்தளம் அக்கரவெளி மண்ணிலிருந்து பொறியியலாளராக யாழ் பல்கலைக்கழகத்தில் மணிமகுடம் சூடிய மாணவன் முஹம்மட் ஸமீர்.
இவர் தனது ஆரம்ப கல்வியை சிலாபம் ரதகுரு கல்லூரியிலும் இடைநிலை கல்வியை வெண்ணப்புவ ஜோஷப் வாஷ் கல்லூரியிலும் பயின்று க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தரத்தில் கணிதபீடத்தை தெரிவு செய்து அதில் சிறந்த பெறுபேற்றை பெற்று யாழ்பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திற்கு தெரிவான இவர் இணைபாடவிதான செயற்பாடுகள் மட்டுமன்றி விளையாட்டு செயற்பாடுகளிலும் அதீத திறமைகளை நிலை நாட்டியுள்ளார்.
அக்கரவெளி சீ.எம் உதுமான் லெப்பை மற்றும் தாரக்குடிவில்லு சிங்கள மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி சுமையா ஆகியோரின் புதல்வரான இவர் தற்போது கான் இன்ஜினியரிங் தனியார் நிறுவனத்தில் தும்மலசூரிய பாடசாலை வேலைத்திட்டத்தின் ல் பொரியியலாளராக சேவையாற்றுகிறார்.
அக்கரவெளி வரலாற்றில் முதன் முதலாக அரச பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியலாளராக பட்டம் பெற்ற முதல் மாணவன் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments