புத்தளம் - உடப்பு முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித நோன்பு பெருநாள் தொழுகை
(உடப்பு-க.மகாதேவன்)
உடப்பு முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் புனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று (31)திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 7.30மணிக்கு புனித ரமலான் தொழுகைக்காக இஸ்லாமிய அன்பர்கள் தமது பள்ளிவாசலில் கூடினர். இதன் போது பெண்களும் தமது தொழுகைகளில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்து தமது பெருநாள் சந்தோஷங்களை ஒவ்வொருவரும் தமது சகாக்களை ஆரத்தழுவிக் கொண்டனர்.
No comments