Breaking News

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறந்து வைப்பு!.

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (28) பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம் முஸ்னி தலைமையில் இடம்பெற்றது.


மேற்படி பாடசாலையின் பிரதான நுழைவாயில் முன்னாள் அதிபர் எஸ்.எம் ஹனீபாவின் வேண்டுகோளுக்கு இனங்க தற்போதைய அதிபர் பீ.எம்.எம் முஸ்னியின் வழிகாட்டலில் மர்ஹூம் எஸ் கதிர்மரிக்காரின் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினரால் நிர்மானிக்கப்பட்டு அவரது புதல்வரான முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம் பைசல் மரிக்காரினால் திறந்து வைக்கப்பட்டது 


இத்திறப்பு விழாவில் புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஐ நௌஸாத், பாடசாலையின் முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.எம் ஹனிபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ, மாணவிகள் சங்க உறுப்பினர்கள் என சகலரினதும் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பைசர் மரைக்காரின் இச் சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




























No comments