Breaking News

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

(சர்ஜுன் லாபீர், தில்சாத் பர்வீஸ்,ஏ.எச்.எம் ஹாரீஸ்)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் மாவட்ட செயலக முன்றலில்  நேற்று (24) நடைபெற்றது. 


சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி சஹ்றான் ஹஸன்(அன்வாரி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். 


இந் நிகழ்வில் திகவாபி விகாராதிபதி பேதி வேல சந்தானந்த நாயக்க,கல்முனை சிவஸ்ரீ க.வி பிரமின் குருக்கள்,அம்பாறை மேதடிஸ் ஆலய அருட் தந்தை ரோகான் அப்பு காமி 

 உட்பட மத போதகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாசீர், பிரதம கணக்காளர் ஏ.எம்.எம் மஹ்ரூப்,பிரதம பொறியியலாளர்  ஏ.பி.எம் சாஹீர்,மாவட்ட கணக்காளர் ஐ.எம் பாரீஸ, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி அனீஸ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயளாலர்கள்,உதவி பிரதேச செயலாளர்கள்,கணக்காளர்கள்,பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் பொலிஸ் மற்றும் இரானுவ உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்வு மாவட்ட செயலக முஸ்லிம் மஜ்லிஸின் நெறிப்படுத்தலிலும் ஒழுங்குபடுத்தலிலும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.













No comments