கற்பிட்டி தில்லையடி தாருல் அர்கம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் இப்தார் நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி தில்லையடி கிராமத்தில் உள்ள தாருல் அர்கம் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் பேஷ் இமாம் றிப்கான் ( றஹ்மானி) தலைமையில் இப்தார் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) சிறப்பாக இடம்பெற்றது
கற்பிட்டி தில்லையூர் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டதாக பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் அன்வர்தீன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கற்பிட்டியின் மூத்த உலமா மௌலவி இபாதத்துல்லாஹ்வின் மார்க்க சொற்பொழிவும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments