கற்பிட்டியைச் சேர்ந்த ஹாரிஸ் உம்ரா கடமையின் போது மக்காவில் காலமானார்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி சின்னக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் பெரிய குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் இலங்கை வங்கியின் நுரைச்சோலை கிளை முகாமையாளர் எம்.சீ எம் ஹாரிஸ் தனது 70 வயதில் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற சென்றிருந்த போது மக்காவில் காலமானார்
ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களை இஹ்திகாப் உடன் மக்காவில் அமல்களைக் கொண்டு சிறப்பிக்கும் முகமாக உம்ரா பயணம் சென்றிருந்த எம்.சீ.எம் ஹாரிஸ் உம்ரா பயணத்தின் இறுதி தருவாயில் சிறு சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளார் அன்னாரின் ஜனாஸா திங்கட்கிழமை (31) இலங்கையின் நோன்புப் பெருநாள் தினத்தில் மக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கற்பிட்டி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலின் முன்னாள் பொருளாளரும், கற்பிட்டி ஸகாத் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பு வகித்தவரும், பெரியகுடியிருப்பு பகுதியின் மார்க்க பணிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments