இஸ்ரேலுக்காக காசாவை அழிக்கும் ட்ரம்ப்பின் பின்னணி என்ன ? அமெரிக்காவை ஆழ்வது கிறிஸ்தவரா ? யூதரா ?
ஒவ்வொரு ஆட்சியாளர்களை இயக்குவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் கொள்கை வகுப்பாளர்கள் இருப்பார்கள். இவர்களை பற்றி வெளியே பேசப்படுவதில்லை. இவர்களது மனோநிலைக்கு ஏற்பவும் ஆட்சியாளர்கள் இயக்கப்படுவார்கள்.
அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை இயக்குபவர்களில் முக்கியமானவர் அவரது மருமகன் ஜரேல்ட் குஷ்ணர். ட்ரம்ப் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும், மருமகன் குஷ்ணர் ஒரு யூதர்.
இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து அதனை பாதுகாப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும், பாலஸ்தீனர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் இஸ்ரேலுக்கு வெளியே உள்ள யூத சியோனிச சக்திகள் இயங்கி வருகின்றன. அவ்வாறான சியோனிஸ்ட்களில் தற்காலத்தில் மிக பிரதானமானவர் ட்ரம்பின் மருமகன் ஜரேல்ட் குஷ்ணர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதேசம் மற்றும் மேற்குக்கரை ஆகிய பாலஸ்தீனப் பகுதிகளில் யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான இஸ்ரேலிய இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு ஜரேல்ட் குஷ்ணரினால் பெருமளவில் நிதி வழங்கப்பட்டு வருகின்றது.
இவர் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரான முஹம்மட் பின் சல்மானின் மிக நெருங்கிய நண்பர் அத்துடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் குடும்ப நண்பர்.
2018 இல் இளவரசர் பின் சல்மானின் உத்தரவினால் எழுத்தாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் கொலை செய்யப்பட்ட விவகாரம் ஆதாரத்துடன் பூதாகரமாக வெடித்தபோது ஜரேல்ட் குஷ்ணர் மூலமாகவே அது மூடி மறைக்கப்பட்டது.
ட்ரம்பின் முதலாவது பருவகால ஆட்சியில் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிப்பதாக ட்ரம்ப் அறிவித்ததுடன், அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றினார். இதற்கு ட்ரம்பின் மருமகனின் அழுத்தமே காரணம் என்று அப்போது பேசப்பட்டது.
2017 ஜூன் மாதம் அவசரமாக சவூதி அரேபியாவுக்கு வந்த ஜரேல்ட் குஷ்ணர் மன்னர் சல்மானை சந்தித்துவிட்டு சென்று சில நாட்களில் அப்போது முடிக்குரிய இளவரசராக இருந்த முகமது பின் நயீப் அனைத்து பொறுப்புக்களிலும் இருந்து நீக்கப்பட்டதாக மன்னரினால் அறிவிக்கப்பட்டதுடன், ஜரேல்ட் குஷ்ணரின் நண்பரான முகம்மட் பின் சல்மான் முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு மத்தியகிழக்கு விவகாரங்களில் ஜரேல்ட் குஷ்ணரின் வகிபாகம் ஏராளமாக உள்ளது.
போர் வேண்டாம் சமாதானம்தான் வேண்டுமென்று உலகிற்கும், ரஷ்யா - உக்ரேன் போரை நிறுத்தும்படியும் ட்ரம்ப் அழுத்தம் வழங்குகிறார் ஆனால் இதில் இஸ்ரேல் மட்டும் விதிவிலக்கானது.
ஏனெனில் காசாவை நரகமாக்குவேன் என்றும், பின்பு காசாவிலிருந்து பாலஸ்தீனர்கள் அனைவரும் வெளியேற வேண்டுமென்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாலஸ்தீனர்களை அச்சுறுத்தி வருவது மருமகனின் அழுத்தமாகும்.
இதிலிருந்து அமெரிக்காவை ஆட்சி செய்வது யாரென்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments