Breaking News

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக அஹ்சன் கடமையேற்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபைக்கான நிரந்தர கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ். மனாசிர் அஹ்சன், தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி  முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, நிதி உதவியாளர் யூ. எம். இஸ்ஹாக் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.


கல்முனை மாநகர சபைக்கு கடந்த ஒரு வருட காலமாக நிரந்தர கணக்காளர் ஒருவர் இல்லாதிருந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் இலங்கை கணக்காளர் சேவையைச் சேர்ந்த ஏ.எஸ். மனாசிர் அஹ்சன் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


இதற்கு மேலதிகமாக காத்தான்குடி நகர சபைக்கான பதில் கணக்காளராகவும்  இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments