புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மதுரங்குளி பிரதேசத்தில் விபத்து
(உடப்பு-க.மகாதேவன்)
புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் மதுரங்குளி பிரதேசத்தில், ஒரெஞ் பாவனை மின்சாதன பொருள் ஏற்றிய லொறியும், கார் ஒன்றும் மோதியதில் காரில் பயணம் செய்தவர்களில் இருவர் படுகாயம் ஏற்பட்டு புத்தளம் வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து இன்று (27) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கார் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments