Breaking News

புத்தளம் மாநகர சபைக்கு 18 உறுப்பினருக்காக 230 பேர் போட்டி முழுமையாக மூன்று வேட்பு மனுவும் பகுதியளவில் ஒன்றும் நிராகரிப்பு

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புத்தளம் மாநகர சபைக்கான 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 08 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேட்சை குழு என 230 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முழுமையாக மூன்று வேட்புமனுவும் பகுதியளவில் ஒருவரின் வேட்புமனுவும் நிராகரிப்பு.


புத்தளம் மாநகர சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் என 16 கட்சிகள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சர்வஜன அதிகாரம் என 10 அரசியல் கட்சிகளும் ஏ.ஓ  அலிக்கான், ஏ.எஸ் சுபியான், எம்.எல் பால்ராஜ், ஏ.எஸ்.எம் அஸ்லம் ஆகியோரின் தலைமையிலான 04 சுயேட்சை குழுக்களால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ் ஏ.எஸ்.எம் அஸ்லம் சுயேட்சை குழு ஆகியவைகளின் வேட்புமனுக்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டதுடன் பகுதியளவில் எம்.எல் பால்ராஜ் தலைமையிலான சுயேட்சை குழுவில் மொஹமட் றம்சான் ராசா மொஹமட் என்பவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டதுடன் ஏனைய  08 அரசியல் கட்சிகள் மூன்று சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


புத்தளம் மாநகர சபைக்கு 11 வட்டாரங்களில் இருந்து  11 உறுப்பினர்களும் போனஸ் உறுப்பினர்கள் 07 என 18 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இம்முறை 36,523 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments