Breaking News

முகத்துவாரத்தில் 17 வருடங்களின் பின் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி முகத்துவாரத்தின் கிராம உத்தியோகத்தர் எம். பீ.எம் அர்ஷதின் அயராத முயற்சியின் பயனாக கடந்த 17 வருடங்களாக நடைபெறாது மூடப்பட்டிருந்த தமிழ் மொழி மூல பாலர் பாடசாலை புதன்கிழமை (05) உத்தியோக பூர்வமாக கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .


இந் நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.பீ.சீ ஜீ குலசேகர, கற்பிட்டி பிரதேச சபையின் முன்பிள்ளை கல்வி மேற்பார்வை உத்தியோகத்தர் ஜே.எச்.ஆர்.பீ ஜயமக, முகத்துவாரம் அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஓ.எஸ் ரமீஸா, கற்பிட்டி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.பீ சாந்திலதா, கற்பிட்டி பிரதேச செயலக உளவளத்துணை ஆலோசகரும் பாலர் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தருமான  எம்.எச்.எம் நிப்ராஸ், முகத்துவாரம் சிங்கள பாலர் பாடசாலை ஆசிரியர் யூ.பீ.எஸ் மல்காந்தி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம் பஸான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம் ஷாகிர் ஆகியோருடன் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.













No comments