கற்பிட்டி பிரதேச சபைக்கு 08 அரசியல் கட்சிகள் இரு சுயேட்சை குழு என 31 உறுப்பினருக்கு 340 பேர் போட்டி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அவுட்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
எதிர்வரும் மே மாதம் 06 ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கான 31 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 08 அரசியல் கட்சிகள் மற்றும் இரு சுயேட்சை குழு என 340 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிப்பு.
கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் என 13 கட்சிகள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் வியாழக்கிழமை (20) நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன அதிகாரம் என ஒன்பது அரசியல் கட்சிகளும் எச்.எம்.எம் பைறூஸ் மற்றும் டி கெமுனு தலைமையிலான இரு சுயேட்சை குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்தது இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்புமனு மாத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் ஏனைய 08 அரசியல் கட்சிகள் இரு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கற்பிட்டி பிரதேச சபைக்கு 17 வட்டாரங்களில் இருந்து 19 உறுப்பினர்களும் போனஸ் உறுப்பினர்கள் 12 என 31 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இம்முறை 91,162 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments