Breaking News

கற்பிட்டி சமூர்த்தி வங்கி க்கான புதிய பரிபாலன சபை தெரிவு

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

கற்பிட்டி சமூர்த்தி வங்கியின் 2025 ம் ஆண்டுக்கான புதிய பரிபாலன சபைக்கான அங்கத்தவர்கள் தெரிவிற்கான கூட்டம் திங்கட்கிழமை (10) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் கற்பிட்டி சமூர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் டப்யூ.எம் தினுஷா தலைமையில் இடம்பெற்றது 


மேற்படி கூட்டத்தில் கற்பிட்டி சமூர்த்தி வங்கி பிரிவில் உள்ள பத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த வங்கியின் வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய வண்ணம் பரிபாலன சபைக்கு ஒரு கிராமம் சேவையாளர் பிரிவில் ஒருவர் வீதம் பத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதன்படி 2025 ம் ஆண்டின் புதிய  உறுப்பினர்களாக

புதுக்குடியிருப்பு  -  சர்மிளா

பெரியகுடியிருப்பு  -  சப்னா

சின்னக்குடியிருப்பு -   பாத்திமா

டச்பே  -  நெலும் குமாரி

ஆனவாசல் -  நதிகா சுபாசினி

வன்னிமுந்தல் -  நஸ்ரின்

மண்டலக்குடா -  ரசாக்கிய்யா

குறிஞ்சிப்பிட்டி  வடக்கு -   டயனா  சுரங்கி

கண்ட்குளி குடா -  ரெனுகா புஸ்பலதா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பள்ளியாவத்தை பிரிவின் சமூர்த்தி சஙகம் தொடர்ந்து ஒரு வருட காலமாக மகா சபை கூட்டத்திற்கு  சமூகமளிக்காமையின் காரணமாக உறுப்பினர் தெரிவு இடம்பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.







No comments