புத்தளம் பொது நூலகத்தின் நடமாடும் சேவை.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பொது நூலகம் இவ்வாண்டிற்கான தனது முதலாவது நடமாடும் நூலக சேவையை புத்தளம் மாவட்ட செயலக வளாகத்தில் இயங்கும் ஏ டூ இசட் முன்பள்ளி பாடசாலையில் இருந்து ஆரம்பித்தது.
ஏ டூ இஸட் முன்பள்ளியின் பொறுப்பாசிரியை இனோகா தூல்வல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத் தலைமையிலான நூலகத்தின் சேவையாற்றும் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுடன் நூலகத்தின் அதிகாரிகள் கலந்துரையாடி மாணவர்களுக்கு கதைகள் கூறி பாடல்களை பாடி மாணவர்களை மகிழ்வித்தனர்.
No comments