கற்பிட்டி இளைஞர் சம்மேளனமும் செடோ ஸ்ரீலங்காவும் இணைந்து கற்பிட்டியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பஸ் நிலையத்தில் இருந்து துறையடி வரையான வீதியின் இரு ஓரங்களையும் துப்பரவு செய்யும் பாரிய வேலைத்திட்டத்தினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலின் கீழ் கற்பிட்டி இளைஞர் சம்மேளனமும் செடோ ஸ்ரீலங்கா நிறுவனமும் இணைந்து கற்பிட்டி பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் மேற்க் கொள்ளப்பட்டது
இந் நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சந்திய பிரிய தர்சினி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புத்தளம் மாவட்ட காரியாலய உதவிப் பணிப்பாளர் றோஹினி ஹேம மாளா, கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக, கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஜனாதிபதி செயலகத்தின் தன்னார்வ செயற்குழுவின் புத்தளம் மாவட்ட பிரதிநிதி நிபுனா, கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவள ஆலோசகர் எச் எம் நிப்ராஸ், ஆனவாசல் கிராம உத்தியோகத்தர் ஜே. டீ பீரிஸ், நவகத்தேகம பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜே.எம் சூரசேன, கருவலகஸ்வெவ பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் சுரனி ராஜபக்ச, கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் ஆனவாசல் திரிய பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டதாகவும் வேர்ல்ட் விஷன் நிறுவனம் அனுசரணை வழங்கியதாகவும் செடோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தருமான ஏ.ஆர் முனாஸ் தெரிவித்தார்.
Post Comment
No comments