Breaking News

புதுப்பொலிவு பெற்றுள்ள கற்பிட்டி தில்லையூர் தாருல் அர்கம் பள்ளிவாசல்

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

கற்பிட்டி தில்லையூர் தாருல் அர்கம் பள்ளிவாசல் கற்பிட்டி தனவந்தர் ஒருவரினால் புணரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் முஸ்லிம்கள் தமது இறை கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை (07) பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.


கற்பிட்டி தில்லையூர் தாருல் அர்கம் பள்ளிவாசலின் மேற்பகுதி நீண்ட நாட்களாக சிதைவடைந்து உடைந்து விழும் தருவாயில் காணப்பட்டது. இதன் புணரமைப்பு தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகம் முயற்சித்தமைக்கு அமைய கற்பிட்டி நகரில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் தனி முயற்சியாக தனது பெற்றொர்களின் மறுமை வாழ்வுக்காக அவர்களின் ஞாபகர்த்தமாக மேற்படி தில்லையூர் தாருல் அர்கம் பள்ளிவாசல் சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் புணர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments