Breaking News

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கு

புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு   என். எம். ஹபீல் (கபூரி,JP)

எதிர் வரும் மார்ச் (2025) மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய பிரதான பாடங்களுக்கான கருத்தரங்கு உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் பெப்ரவரி மாதம் 17ம் திகதி இடம்பெற்றது.


இதில்  78 மாணவர்கள்  கலந்து கொண்டனர்.


வெளிநாட்டு வாழ் புதுக்குடியிருப்பு சமூகம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் வளவாளராக வரலாறு பாட ஆசிரியர் ஏ.எஸ்.எம்.எஸ்.பீ. அஹமட் (BA PGD ISA History ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக  நடத்தியதோடு இவ்வமைப்பால் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ், வரலாறு போன்ற பிரதான பாடங்களுக்கான கருத்தரங்குகள் நடாத்துவதற்கான அனுசரணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











No comments