கற்பிட்டியில் இடம்பெற்ற வாழ்க்கை மாற்றத்திற்கான உளவளதுனை பயிற்சி பட்டறை
(கற்பிட்டி செய்தியாளர் எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டியில் முதன் முறையாக வாழ்க்கை மாற்றத்திற்கான ஒரு நாள் உளவள ஆலோசனை இலவச பயிற்சிப் பட்டறை ஒன்று கற்பிட்டி செடோ நெனசலவின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (18) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் செடோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர், நிர்வாக இயக்குநர் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.
உளவியல் என்பதன் முக்கியத்துவம், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் தனிநபர் மற்றும் குடும்ப ஆலோசனைகள், குழந்தைகள் மற்றும் சமூக உளவியல் சேவைகள் என்பன பற்றிய தெளிவூட்டல்களை
கற்பிட்டி பிரதேச செயலக சமூக வலுவூட்டல் அமைச்சின் புத்தளம் மாவட்ட உளவளதுனை இணைப்பாளர் எச் .எம் நிப்ராஸ் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் செடோ ஸ்ரீலங்காவின் நிர்வாக பொருப்பாளரும் செடோ நெனசல நிர்வாக இயக்குநருமான ஏ.ஆர். எம் ஹாபிஸ், செடோ ஸ்ரீலங்கா பொருளாளர் மபாஹிஸா பேஹம், செடோ ஸ்ரீலங்கா கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு அதிகாரி எஸ்.எப் சுஜானா, செடோ நெனசல உளவளதுணை இணைப்பாளர் எம்.ஆர்.எப் சிப்கா, செடோ ஸ்ரீலங்கா ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம் சஜான் மற்றும் செடோ ஸ்ரீலங்காவின் காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் சப்னா பானு ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இப் பயிற்சி பட்டறையில் சுமார் 50 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments