சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய புதிய அதிபராக றிப்கா அன்ஸார் நியமனம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைய திருமதி றிப்கா அன்ஸார் இன்று (07) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள 1 C பாடசாலையான கமு/கமு மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமை ஏற்றுக் கொண்டார்.
இவரை பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் அயல் பாடசாலையினர், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் போன்றோர் வாழ்த்தி, வரவேற்றனர்.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக், மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. ஏ. ஜப்பார், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஆர்.எம். அன்ஸார் மற்றும் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார், பொறியியலாளர் கமால் நிஷாத், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார் உட்பட ஏனைய அதிபர்கள், பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post Comment
No comments