Breaking News

ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூதுக்கான சேவை நலன் பாராட்டும், கௌரவிப்பும்

ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூதுக்கான சேவை நலன் பாராட்டும் பிரியாவிடை கௌரவிப்பு நிகழ்வும்                                   ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம் எப் எம் பாறூக்  தலைமையில்  இடம் பெற்றது.


இவ்விழாவின் அதிதிகளாக ஏறாவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்                                              எஸ் .ஏ.சீ நஜிமுதீன் , மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளரும் அமைப்பின் கல்வி பிரிவு தலைவரும் விரிவுரையாளருமான ஏ றியாஸ், ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் எம் சித்தீக் , ஏறாவூர் பொலிஸ் நிலைய நிருவாக உத்தியோகத்தரும் உதவி பொலிஸ் அதிகாரியும் அமைப்பின் ஆலோசகருமான எஸ்.எல் சரூக், சமூர்த்தி முகாமையாளர் அலி மொஹமட் நிஹாறா, கிராம சேவை உத்தியோகத்தர், மரண விசாரணை அதிகாரி நஸீர் ஹாஜியார், அமைப்பின் பிரதி தலைவர் அல்ஹாஜ் முசம்மில், கண்ணியத்துக்குரிய உலமாக்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.


ஏறாவூர் பிரதேச செயலகத்தின் செயலாளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் திருமதி நிஹாரா மெளஜுதின் சேவையைப் பாராட்டி ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










No comments