Breaking News

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புட்சல் மைதானம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புட்சல் மைதானம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அணிக்கு ஐவர் கொண்ட புட்சல் சுற்றுப்போட்டி ஒன்றும் நடாத்தப்படதோடு, இப்போட்டிகளில் சுமார் 15 அணிகள் கலந்து சிறப்பித்தன. 


மிகவும் விறு விறுப்பாக இடம் பெற்ற இப்போட்டிகளின் இறுதிப்போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணியும் புத்தளம் சோல்டன் அணியும் கலந்து கொண்டதில், லிவர்பூல் அணியை சோல்டன் அணி வெற்றி கொண்டு சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதூர்தீன், முன்னாள் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி, உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும்  உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.












No comments