Breaking News

கற்பிட்டியிலிருந்து கண்டக்குளி குடா வரையான சுற்றுலா பகுதி காபட் பாதை இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும்

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

கற்பிட்டியிலிருந்து கண்டக்குளி குடா வரையான சுற்றுலா பகுதிக்கான காபட் பாதை அமைப்பது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் உல்லாச விடுதிகளின் முகாமையாளர்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் கண்டக்குளி வடக்கு குடாவில் உள்ள கூட்ட மண்டப கட்டிடத்தில் கிராம உத்தியோகத்தர் எம்.பீ.எம் அர்ஷத் தலைமையில் இடம்பெற்றது.


இதில் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க, கிராம உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம் முஸாதிக், எம் றியாஸ், பாதை அமைப்பு ஒப்பந்த நிறுவன அதிகாரிகள், பொறியியலாளர்கள், தில்லையூர் மீனவ சங்கத் தலைவர் சபுறுல்லாஹ், தொழிலதிபரும் சமூகசேவையாளருமான ஏ.ஆர்.எம் முஸம்மில் என பலரும் கலந்து கொண்டனர்.


கற்பிட்டி நகரின் பெரிய பள்ளிவாசல் தொடக்கம் கண்டக்குளி குடா வரையான பிரதான பாதையிலேயே உல்லாசப் பயணிகள் சுற்றுலா விடுதிகள் அதிகமாக காணப்படுகிறது. எனினும் இப் பாதை நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.


உலக வங்கியின் நிதி வழங்கல் மூலம் கற்பிட்டி பெரிய பள்ளிவாசல் தொடக்கம் கண்டக்குளி குடா வரையான பாதை முழுமையாக காபட் பாதையாக புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  இப்பாதையின் புனரமைப்பு வேலைகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒப்பந்தக்கார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






No comments