Breaking News

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டி

புத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கனமூலை முஸ்லிம்  மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் முதல் நாள் போட்டியாக மரதன் ஓட்டம் வெள்ளிக்கிழமை (07) பாடசாலையின் அதிபர் பீீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்றது.


இதில் சம்ஸ், கமர், நஜ்ம் ஆகிய இல்லங்களைச் சேர்ந்த  முப்பது மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றியதுடன் சுமார் 5KM  தூரம் கொண்டதாக இம் மரதன் ஓட்டப் போட்டி அமைந்திருந்தது.

 

அதன்படி  நஜ்ம் இல்லத்தைச் சேர்ந்த மாணவன் எம்.ஐ.எம். இல்ஹாம் முதலாம் இடத்தையும், அதே இல்லத்தைச் சேர்ந்த மாணவன் எம்.எப்.எம். ஜாஸிம் இரண்டாம் இடத்தையும், சம்ஸ் இல்லத்தைச் சேர்ந்த மாணவன் ஏ.எல்.எம். சிஹான் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.


இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், உபஅதிபர் உட்பட கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க்  எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி),   பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கலந்து கொண்டு இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெறுவதற்கு பங்களிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.


மூன்று இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொண்ட பத்து இடங்கள்.


1. எம்.ஐ.எம். இல்ஹாம்  - நஜ்ம் இல்லம்

2. எம்.எப்.எம். ஜாஸிம் - நஜ்ம் இல்லம்

3. ஏ.எல்.எம். சிஹான் - சம்ஸ் இல்லம்

4. எச்.என்.எம். உஸ்மான் நஜ்ம் இல்லம் 

5. ஏ.ஏ. ரிழா நஜ்ம் இல்லம்

6. எம்.எப்.எம். பாஹிம் சம்ஸ் இல்லம். 

7. எம்.எப்.ஏ. யுஸ்ரி கமர் இல்லம் 

8. எம்.எப்.எம். பஸான் சம்ஸ் இல்லம்

9.  எம். என்.எம். நிப்லான் கமர் இல்லம்.

10. ஜே.எம். சஹீம் நஜ்ம் இல்லம்.















No comments