புத்தளத்தில் உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்ச்சி
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் இந்து மத்திய கல்லூரி மற்றும் புத்தளம் மனல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் உயர் தர மாணவர்களுக்கான ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தல் மற்றும் தலைமைத்துவ பண்பை வளர்த்தல் என்பதன் அடிப்படையில் பாடசாலை அதிபர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இச் செயலமர்வு ஸ்ரீலங்கா யுனிட்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் செடோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற பயிற்சியின் வளவாளர்களாக கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவரும் செடோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சன்ஹீர் சஜான் மற்றும் செடோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளர் ஏ.ஆர்.எம் ஹாபீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இரு பாடசாலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 60 மேற்பட்ட உயர்தர மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments