கற்பிட்டி தில்லையூர் மீனவர் சங்கத்தின் கூட்ட மண்டபம் புனரமைப்பு
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ் - றிஸ்வி ஹூசைன்)
கற்பிட்டி தில்லையூர் மீனவர்களுக்கான கூட்ட மண்டபம் நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த நிலையில் மீனவ சங்கத்தின் தலைவர் சபுறுல்லாஹ்வின் முயற்சியின் ஊடாக கடல்சார் நிறுவனமான என்.எப்.ஐ கிராப் கவுன்சிலின் நிதி வழங்கல் மூலம் மேற்படி கூட்ட மண்டபம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது
புனரமைப்பு செய்யப்பட்ட கற்பிட்டி தில்லையூர் மீனவ சங்க கூட்ட மண்டபத்தை பார்வையிட்ட தில்லையூர் தாருல் அர்கம் பள்ளிவாசல் பேஷ் இமாம் றிப்கான் ( றஹ்மானி) மற்றும் பள்ளிவாசல் தலைவர் அன்வர்தீன் ஆகியோர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments